பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 39

கழலே அணிவித்தார். யானை, குதிரை, பல்லக்கு, குடை, கொடி முதலிய விருதுகளே விருப்புடன் அளித்தார். அவரைத் தம்முடன் சில நாட்கள் தங்குமாறு பணிந்து வேண்டிக்கொண்டார்.

நீதிநூல் ஒதுதல்

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சில நாட்கள் மதுரையில் தங்கினர். அங்குத் தங்கியிருக்கும் நாளில் அங்கயற்கண் அம்மை மீது மீனுட்சியம்மை குறம், மீட்ைசியம்மை இரட்டை மணிமாலை முதலிய நூல்களேயும் பாடினர். மன்னரின் விருப்பப்படி திேநெறி விளக்கம்' என்னும் அரிய நீதிநூல் ஒன்றையும் பாடிக் கொடுத்தார் இந்நூலுககுப் பரிசாக அரியநாயகிபுரம் என்னும் ஊரையே மன்னர் மனம் உவந்து வழங்கினர். அவ்வூர் ஆண்டு ஒன்றுக்கு இருபதியிைரம் பொன் வருவாய் உடையது.

திருச்சிராப்பள்ளியில் குருபரர்

இத்தகைய பெரும்பரிசைப் பெற்ற முனிவர் மதுரையில் எழுந்தருளும் சோம சுந்தரப் பெருமான்மீதும் நூல் பாடவேண்டும் என்று விரும்பினர். அதல்ை மதுரைக் கலம்பகம்' என்ற நூலைப் பாடினர். பின்பு திருச்சிராப்பள்ளியை அடைந்தார். அங்