பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

40 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

கிருந்த நாயக்க மன்னராலும் போற்றப்பெற் ருர். திருவரங்கத்தில் வாழ்ந்த வைணவப் புலவ ராகிய பிள்ளைப் பெருமாள் அய்யங்காரைக் கண்டு உரையா: .ஞர். இருவருப நாயக்க மன்னரைச் சக்திகதனர். மன்னர், அவர் களிடம், " அரசாங்க நாணயத்தில் எவ்வடை யாளம் பொறிக்கலாம் ' என்று கேட்டார். அதற்கு ஐயங்கார் கருடன் என்ருர். முனிவர் 'விடை’ என் ருர். மேலும் அவர், ' கருடன் வட்டமிட்டு பறங்து சென்று விடும்; விடையோ முட்ட முடடச் செல்லும் வேகம் உடையது' என்று கயம்படக் கூறினர். அது கேட்ட மன்னர் காசுகளில் விடையையே பொறிக்குமாறு கட்டளையிட்ட ர்.

தருமையில் குமரகுருபரர்

பின்பு குமரகுருபரர் தருமபுர ஆதீனத்தை அடைந்தார். அப்போது ஆதீனத் தலைவராக மாசிலாமணித் தேசிகர் என்பவர் விளங்கினர். அவரை வணங்கி அண்மையில் அமர்ந்தார். அவர், குமரகுருபரரை நோக்கி, ஐந்து பேரறிவு' என்று தொடங்கும் பெரிய புராணத் திருப்பாட்டி ன் அனுபவப் பொருள் யாது ?” என்று வினவினர். அப்போது முனிவர்க்குத் திகைப்புத் தோன்றியது. உடனே திருச்செங் துரில் முருகன் அருளிச்செய்தது அவர் கினை