பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 43

தார். காசிக்குச் சென்று பல அறங்களேயும் செய்யுமாறு பணித்தார். தேசிகரின் கட்டளைப் படி பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு காசி மாநகரை அடைந்தார்.

கலைமகளின் கருணைக் காட்சி

காசியில் பல அறங்களையும் புரிவதற்குத் தக்க இடம் ஒன்றைத் தேடினர். அங்ககள் மன்னனேக் கண்டு, அவனிடம் அதனேப் பெற எண்ணினர். அவன் முகலாய மன்னன் ஆதலின் அவைேடு உரையாடுதற்கு இந்துத் தானி மொழியை அறிய விரும்பினர். அன்று இரவே கலைமகள் திருவருளேப் பெறுவதற் காக, அவள் மீது சகலகலாவல்லி மாலே என் னும் சின்னுரலைப் பாடினர். முனிவரின் கனிந்த பாடலைக் கேட்ட கலைமகள் காட்சி அளித்தாள். அ வ ரு க்கு இந்துத்தானி மொழியை அறிவுறுத்தினுள்.

காசியில் திருமடம் அமைத்தல்

- முகலாய மன்னனுடன் உரையாடும் திறத்தைப் பெற்ற முனிவர், அவன் அரச வையை அடைந்தார். உயிருள்ள சிங்கத்தின் மீது அமர்ந்து அவன் அவையினே அடைங் தார். முனிவர் வரவைக் கண்டான் முகலாய மன்னன். அவர் இந்துத்தானி மொழியில்