பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தமிழ் அகராதியின் தந்தையார்

தமிழில் முதல் அகராதி

தமிழின் முதன் எழுதது அகரம் ஆகும். 'அகர முதல எழுத்தெல்லாம் என்பது வள்ளுவர் வாக்கு. தமிழில் உள்ள சொற்களே அகர முதலாக வரிசைப்படுத்தித் தொகுத்த நூலே அகராதி எனப்படும். தமிழில் உள்ள அருஞ்சொற்களின் பொருளே அறிவதற்கு முற்காலத்தில் நிகண்டு' என்னும் ஒரு வகை நூல்களே உதவி வந்தன. செய்யுட்களா லான அவையெல்லாம் குறைக்க அறிவுடை யார்க்குப் பயன்படவில்லை. இந்தக் குறை யைப் போக்க எழுந்ததே அகராதி என் னும் நூலாகும். அத்தகைய சதுரகராதி' என்னும் நூலேத் தமிழில் முதன் முதல் தொகுத்து உதவியவர் வீரமாமுனிவர் ஆவர். அவரையே அறிஞர்கள் 'தமிழ் அகராதியின் தங்தை என்று போற்றி வருகின்றனர்.

ஊரும் பேரும்

வீரமாமுனிவர் இத்தாலிய காட்டைச் சேர்ந்தவர். அங்குள்ள மாந்துவா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காஸ்திரியோனே என்னும் சிற்றுாரில் முந்நூறு ஆண்டுகளுக்கு