பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

முன் பிறந்தவர். இவர் தந்தையார் கண் டோல்போ பெவி' என்பவர். இவர் தம் மகனுக்குக் கொன்ஸ்டான்ஸ் ஜோசப் என்று பெயர் சூட்டினர். கொன்ஸ்டான்ஸ் என்னும் சொல்லுக்குத் தைரியம் என்பது பொருள் ஆகும். ஆதலின் வீரமாமுனிவர் தமிழ் நாட் டிற்கு வங்தபோது, தம் பெயரைத் தைரிய 5ாத சுவாமி' என்று அமைத்துக் கொண்டார். அவருடைய தமிழ்ப்புலமையைக் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அவரை வீரமா முனிவர் என அழைத்தனர்.

முனிவரின் தமிழ்ப் புலமை

தமிழ் நாட்டில் இயேசு மத உண்மை களேப் பரப்புவதற்காக அயல்நாட்டு அறிஞர் கள் பலர் வந்தனர். அவர்களில் முதன்மை யானவர் வீரமாமுனிவர். அங்காளில் சிறந்த தமிழாசிரியராக விளங்கியவர் சுப்பிரதீபக் கவிராயர். அவரிடம் வீரமாமுனிவர் முறை யாகத் தமிழ் நூல்களே ஓதி உணர்ந்தார். திருக்குறள், சிங்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நூல்கள் அவர் உள்ளத்தைக் கவர்ந் தன. சிங்தாமணியைப் போன்று கிறித்துமதச் சார்புடைய ஒரு காவியம் செய்ய விரும்பினர். அதன் பயனுகத் 'தேம்பாவணி' என்னும் காவியத்தைப் பாடி முடித்தார்.