பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அகராதியின் தந்தையார் 49

இலத்தீன் மொழியில் திருக்குறள்

தமிழ் நூல்களில் தலைசிறந்து விளங்கு வது திருக்குறள் ஆகும். அந்நூலே மேலே நாட்டினர்க்கு முதன் முதல் காட்டியவர் வீரமாமுனிவரே. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாக விளங்குவது. முதல் இரு பகுதிகளாகிய அறத்துப்பாலேயும் பொருட்பாலேயும் இலத்தின் மொழியில் முனிவர் மொழி பெயர்த்தார். அந்நூலே மற்ற ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்ப்பதற்கு வழிகாட்டியாக உதவியது.

முனிவர் உரைநடை நூல்

வீரமாமுனிவர் தமிழ் வசன நடையை வளர்க்க விரும்பினர். கிறித்துமத போதகம் செய்யும் குருமார்களுக்கு அவர் ஓர் உரை நடை நூலே வரைந்தார். அதற்கு வேதியர் ஒழுக்கம்' என்று பெயரிட்டார். அந்நூலே முனிவர் இயற்றிய உரைநடை நூல்களில் மிகவும் உயர்த்தது.

சமயவாதமும் தமிழ் உரைகடையும்

சமய சம்பந்தமாக வாக்கு வாதம் புரிவ திலும் எழுத்து வாதம் நிகழ்த்துவதிலும் முனிவர் தனிவல்லமை யுடையவர். தரங்கம்

மு. வ. மு.-4