பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

பாடியில் தேனிய சங்கத்தைச் சார்ந்த கிறித்த வர்கள் இருந்தனர். அச்சங்கத்தார்க்கும் வீரமாமுனிவர்க்கும் சமயவாதம் நடந்தது. அச்சங்கத்தாரின் கொள்கைகளே மறுத்து, முனிவர் ஒரு நூல் எழுதினர். அதற்கு வேத விளக்கம்' என்று பெயர். தேனிய சங் கத்தாரும் வேதவிளக்கத்தை மறுத்துத் திருச் சபை பேதகம்' என்னும் சிறு நூல் ஒன்றை வெளியிட்டனர். அதனேயும் முனிவர் மறுத் துப் பேதகம் அறுத்தல்' என்னும் கட்டுரை ஒன்று எழுதினர். இவ்வாறு வாதம் வளர வளரத் தமிழ் வசன நடையும் வளர்ந்து வந்தது.

சமயவாதத்தில் வெற்றி

இவ்வாறு வீரமாமுனிவர் பல வாக்கு வாதங்களேச் செய்தார். ஒரு சமயம் முனி வரை வாதில் வெல்லக் கருதி ஒன்பது சடைப் பண்டாரங்கள் வந்தனர். அவர்கள் திருக் காவலூரை அடைந்து ஒரு மாத காலம் தங்கி, முனிவருடன் வாதம் புரிந்தனர். இறுதியில் தோல்வியுற்ற அப்பண்டாரங்களில் அறுவர் இயேசு மதத்தை ஏற்றுக்கொண்டனர். மற்ற மூவரும் தம் சடையை அறுத்தெறிந்து விட்டுப் போயினர் என்பர்.