பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அகராதியின் தந்தையார் 51

முனிவர் இயற்றிய இலக்கணம்

வீரமாமுனிவர் தமிழ் இலக்கணத்தை கன் ருக ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் கன்னுால் இறுதியாக உள்ள இலக்கண நூல்களே எல்லாம் இனிது க ற் ரு ர். 'தொன்னுரல் விளக்கம்' என்னும் பெயரால் தமிழ் இலக்கணம் ஒன்றைச் செய்தார். அது பெரும்பாலும் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னுரலே ஒத்துள்ளது. கன்னுாலில் எழுத் திற்கும் சொல்லிற்குமே இலக்கணம் கூறப் படும். வீரமாமுனிவர் இயற்றிய தொன் னுரலிலோ எழுத்து, சொல், பொருள். யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணமும் சொல்லப் பட்டுள்ளன.

காவலூரில் கல்லூரிப் பணி

ஏட்டுத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேற்றுமையை வீரமாமுனிவர் உணர்ந்தார். அவ்விரு தமிழுக்கும் உரிய இலக்கணத்தைத் தனித்தனியே இலத்தின் மொழியில் எழுதினர். அந்நூல் இரண்டும் இந் நாளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இருவகை இலக்கணத்தையும் கிறித்தவ மத வேதியர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முனிவர்