பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

விரும்பினர். திருக்காவலூரில் அவ்வேதியர்க் காகக் கல்லூரி ஒன்றை அமைத்தார். அதில் தாமே ஆசிரியராக அமர்ந்து இலக்கணத்தைக் கற்பித்தார். இவருடைய உரைகடை நூல் களில் ஒன்று பரமார்த்த குருகதை. அது மிகவும் நகைச்சுவை நிரம்பியது. பஞ்ச தந்திர நூலைப் போன்று பல நீதிகளே விளக்குவது ஆகும்.

முனிவரின் பணியும் தமிழ்த்தாயின் அணியும்

இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த முனிவர், தம் அறுபதாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் அம்பலக் காட்டில் உள்ள கிறித்தவ மடத்தில் தங்கியிருந்த பொழுது அவரது உயிர் பிரிந்தது. அவர் பாடிய தேம்பாவணி, தமிழ்த் தாயின் கழுத்தில் வாடாத மாலேயாக விளங்குகிறது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலேயாகக் காட்சி தரு கிறது. தொன்னூல் விளக்கம் .ெ பா ன் னுரலாகப் பொலிகிறது. அகராதி முத்தார மாக அழகு செய்கிறது. வீரமாமுனிவர் தமிழ் வளர்த்த முனிவர்களுள் ஒருவராக விளங்கு கிரு.ர்.