பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ் வளர்த்த தம்பிரான்

களத்தார்ப் பேருமை

தொண்டை | ண் ைடு சான்ருேர் உ ைத்து’ என்று தமிழ் மூதாட்டியார் பாராட்டினர். அத்தகைய தொண்டை நாட் டில் தென்களத்தூர் என்னும் திருப்பதி ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் அவ்வூரைச் சூழ்ந்த நிலங்களில் கெற்கதிர் பொற்கதிர் போல் பொலிந்தது. அதல்ை அவ்வூரைப் "பொன் விளைந்த களத்துார் என்று புலவர்கள் போற்றினர்.

தமிழ்ப் புலமை பெறுவதில் விருப்பம்

இத்தகைய களத்துாரில் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ப் புலவர் ஒருவர் தோன்றினர். அவர் செங்குங்தர் மரபைச் சேர்ந்தவர். அவர் உள்ளூரில் ப ள் வரி க் கல்வியைக் கற்று முடிததார். பின், புலமைக் கல்வி கற்றுப் புலவராக எண்ணினர். அங் காளில் திருவாரூரில் வைத்தியநாத நாவலர் என்பார் பெரும்புலவராக விளங்கினர். அவர் இலக்கிய இலக்கணங்களில் வல்லவராக இருக் தார். அவரே 'இலக்கண விளக்கம்' என்னும் சிறந்த நூலைச் செய்தவர்.