பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

காவலரின் நன்மாணவர் ஆதல்

நாவலரின் நற்றமிழ்ப் புலமையைப் பற்றிக் கேள்விப்பட்டார் களத்துார்ப் புலவர். அவரிடம் சென்று தமிழ்ப் புலமை பெற வேண்டும் என்று விரும்பினர். திருவாரூரை அடைந்து நாவலரைக் கண்டு வணங்கினர். தமது விருப்பினை காவலரிடம் பணிவாகத் தெரிவித்தார். அவரும் களத்தார் இளேளுரை மாணவராக ஏற்றுக்கொண்டார். முறையாக இலக்கிய இலக்கணங்களேக் கற்பித்தார். நுண்ணிய அறிவும் திண்ணிய மனமும் படைத்த இளேஞர் மிக விரைவில் பல நூல் களைக் கற்றுத் தேர்ந்தார். செய்யுள் இயற்றும் சிறந்த புலவரும் ஆனர்.

புலவரின் இல்லற வாழ்க்கை

சிறந்த புலமை பெற்ற இளைஞர், ஆசிரி யரிடம் விடைபெற்றுத் தமது ஊரை அடைக் தார். திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். அவர் மனேவி முதல் மகனே ப் பெற்றெடுத்தாள். அப் பிள்ளைக்குப் போதுமான தாய்ப்பால் இல்லை. புலவரிடம் பாற்பசு வாங்குவதற்கும் பணம் இல்லை. வறுமையால் புலவர் மிகவும் வாடினர். வள்ளல் எவரிடமேனும் சென்று இரப்பது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது வல்ல