பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

---ఊబాకాజ=

1. தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர்

தமிழின் பழைமை

நம் தாய் மொழியாகிய தமிழ் மிகவும் பழைமை வாய்ந்தது. இம்மொழி எட் பொழுது தோன்றியது என்று எவரும் கண்டு கூறவில்லே. கல் தோன்றி மண் தோன்முக் காலத்திலேயே முன் தோன்றி முத்த குடி யினரால் பேசப்பெற்ற பெருமையுடையது. இத்தகைய பழைமையான தமிழை வளமைப் படுத்துவதற்காகத் தமிழ் காட்டு மன்னர்கள் சங்கம் அமைத்தார்கள். அம் மன்னர்களில் தலைமையானவர் பாண்டியர் ஆவர்.

தமிழ் வளர்த்த தலைச்சங்கம்

காய்சின வழுதி என்னும் பாண்டிய மன்னன் பழைய தென் மதுரையில் தலச் சங்கத்தை அமைத்தான். அச்சங்கத்திற்குச் சிவபெருமான் தலைமைப் புலவராக விளங் கிர்ை. அச் சங்கத்தின் பல புலவர்கள் கட்டித்,