பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அறிந்தவன் அல்லவா? ஆதலால் கற்றவர்க்கு ஆதரவாக இருப்பவன் அல்லனே ? என்பது மற்ருெரு பொருள். இவ்வாறு கயம்படப் பாடிய நாவலரின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றினர். நன்ருகப் பால் கறந்து கொண்டிருக்த சு ஒன்றையும் பெரும் பொருளேயும் புலவர்க்குப் பரிசாக வழங்கினர். பரிசைப் பெற்ற புலவர் அவ்வள்ளலின் கொடை உள்வத்தைப் பாராட்டிப் பாடினர்.

தில்லையில் அம்மை திருவருள்

களத்துார்ப் புலவர் ஒரு ச ம ய ம் தில்லையை அடைந்தார். அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். காள்தோறும் திருக் கோயிலுக்குச் சென்று பொன்னம்பலக் கூத் தனே வழிபட்டு வருவார். அவரை அங்கும் வறுமை வாட்டியது. அதனுல் ஒருநாள் கூத்தப் பெருமானே வணங்கிக் கொண்டிருக் கும் போது, சிவகாமி அம்மையை கோக்கிப் பாடல் ஒன்றைப் பாடினர்.

"தாயே! திருச்செங் துர் முருகனுக்கு வேல் கொடுத்தாய். கின் கணவனுகிய சிவ பெருமானுக்குத் திருமண நாளில் அம்மியின் மேல் வைப்பதற்குக் கால் கொடுத்தாய். கவுணியர் குலத்தில் உதித்த சம்பந்தருக்குப்