பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தம்பிரான் 57

பால் கொடுத்தாய். மன்மதனுக்குத் தேவர் மூவரும் அஞ்சுமாறு செங்கோலாகிய கரும் பு வில்லைக் கொடுத்தாய். எனக்கு ஏதும் கொடுக்கவிலலேயே' என்னும் பொருள் கொண்ட பாடலேப் பாடிச் சிவகாமியம் மையை வேண்டி ர்ை.

புலவர் படிக்காசு பெறுதல்

உடனே, சிவகாமியம்மையின் திருவரு ளால் அப்பொன்னம்பலத்தின் பஞ்சாக்கரப் படியில் ஐந்து பொற்காசுகள் காணப் பெற்றன. புலவர்க்கு அம்மையின் பொற் கொடை என்ற ஒலி, எல்லோரும் கேட்கு மாறு எழுந்தது. அது கேட்டுப் புலவர் அக மகிழ்வு கொண்டார். தில்லைவாழ் அந்தணர் அப் பொற்காக களே ப் பொன் தட்டி ல் வைத்துக் கோயில்சிறப்புடன் புலவரிடம் வழங்கினர். அன்று முதல்தான் களத்துர்ப் புலவர் படிக்காசுப் புலவர்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்ருர். அவர் மேலும் பல காள் அவ்வாறே படிக்காசு பெற்றுத் தில்லேயில் சில காலம் தங்கி இருந்தார்.

கறுப்ப முதலியார் செய்த சிறப்பு

தொண்டை மண்டலத்தில் மாவண்டுள் என்ற ஊர் ஒன்று உண்டு. அவ்வூரில் கறுப்ப