பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

முதலியார் என்னும் செல்வர் ஒருவர் இருங் தார். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர். அவர் தொண்டை மண்டலத்தின் பெருமை களே எல்லாம் தொகுத்து, ஒரு நூல் பாட வேண்டும் என்று படிக்காசுப் புலவரை வேண்டினர். புலவரும் அதற்கு இசைங்து 'தொண்டை மண்டல சதகம்' என்ற நூலேப் பாடி, அவர் முன்பு அரங்கேற்றினர். அச் சதக நூலைக் கேட்டு மகிழ்ந்த கறுப்ப முலியார் புலவருக்குப் பெரும் பொருளைப் பரிசாக வழங்கினர். புலவரைப் பல்லக்கில் ஏற்றி நகர்வலம் செய்வித்தார். அப் பல்லக்கைத் தாமும் தாங்கிப் புலவரைப் பெருமைப் படுத்தினர்.

சேது மன்னர் சிறப்புச் செய்தல்

பின்பு படிக்காசுப் புலவர் இராமநாத புரத்தை அடைந்தார். அங்காளில் சேது மன்னராகத் திகழ்ந்தவர் இரகுநாத சேதுபதி என்பார். அவர் தமிழ் அறிவிலும் தமிழ் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கினர். அவரைப் படிக்காசர் சென்று கண்டார்.

'தமிழ் காட்டு மூவேந்தர்களும் அழிக் தார்கள். தமிழ் வளர்த்த மூன்று சங்கமும் அழிந்தன. முதல் இடை கடை வள்ளல்கள்