பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தம்பிரான் 59

ஆகிய இருபத்தொரு மன்னர்களும் மறைந்த னா . அதலை புலவாகள வறுமையால காற மில் பஞ்சாகப் பறக்கின்றனர். இத்தகைய கொடிய நாளில் சேது மன்னர் கற்பகத்தரு வாய்ப் புலவர்க்குக் காட்சி தருகிருர்?' என் அனும் பொருள் கொண்ட பாடல் ஒன்றைப் பாடிச் சேது வேந்தரைப் படிக்காசர் பாராட்டினர். படிக்காசரின் புலமையைக் கண்டு மகிழ்ந்தார் சேதுபதி. அவரைப் பல நாள் தம் அரண்மனையிலேயே தம்முடன் தங்குமாறு செய்து பரிசுகள் பல வழங்கினர்.

சீதக்காதி வள்ளலைப் போற்றுதல்

சில நாள் இராமநாதபுரத்தில் தங்கி யிருந்த படிக்காசர் சேதுபதியிடம் விடை பெற்றுக் காயற்பட்டினத்தை அடைந்தார். அவ்வூரில் சீதக்காதி என்னும் முகம்மதிய வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் தமிழை நன்கு உணர்ந்தவர். தமிழ்ப் புலவர்களேப் போற்றும் தண்னருள் நிறைந்தவர். புலவர் அவ்வள்ளலேச் சென்று கண்டார். அங்காளில் இராமநாதபுரப் பகுதியில் உள்ளவர்களைக் கொடிய பஞ்சம் வாட்டியது. பல ஆண்டு களாக மழை பெய்யாமையால் மக்கள் பெரிதும் வருங்தினர். அதனுல் பொன்னிற்கு