பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{5} முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

மோதிரம் அணிந்த கை வெளியே வந்தது. மோதிரத்தை எடுத்துக் கொள்க !' என்ற ஒலி எழுந்தது. அதைக் கண்டு புலவர் வியப்பும் திகைப்பும் அடைந்தார். வள்ளலின் ஆணேப்படி மோதிரத்தைக் கழற்றிக் கொண் டார். செத்தும் கொடுத்தான் தேக்காதி' என்று வாயாரப் புகழ்ந்து போற்றினர்.

தருமை ஆதீனத் தம்பிரான்

பின்பு படிக்காசர் இல்லற வாழ்வைத் துறந்து துறவியாக எண்ணினர். தருமபுரத் தில் இருந்த சைவத் திருமடத்தை அடைந்தார். அத்திருமடத் தலைவரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரிடம் ஞானுேபதேசம் பெற்றுக் காவியாடை அணிந்தார். அன்று முதல் தமிழ் வளர்க்கும் தவமுனிவர் ஆர்ை. படிக்காசுத் தம்பிரான் என அவர் பெயர் மாறியது. கருமை ஆதினத் தலைவர், படிக் காகத் தம்பிரானேத் திருப்புள்ளிருக்கு வேளுர்க் கட்டளைத் தம்பிரானுகப் பணி புரியுமாறு கட்டளையிட்டார்.

கலம்பக அரங்கேற்றம்

புள்ளிருக்கு வேளுரை அடைந்த புலவர் ஆகிய தம்பிரான் திருக்கோயில் பணிகளைச் செவ்வையாக நடத்திவந்தார். அவ்வூர் மக்கள்