பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

தமிழை ஆராய்ந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் நூலகளே இயற்றினர். சிலர் இலக்கிய நூல்களே இயற் றினர். வேறு சிலர் இலக்கண நூல்களே இயற்றினர்.

ஆதியில் தோன்றிய முத்தமிழ் இலக்கணம்

துல்ச்சங்கத்தில் இருந்த புலவர்களுள் சிறந்தவர் அகத்தியர் என்னும் அருந்தவ முன்னிவர் ஆவர். அவரைத் தமிழ் முனிவர் என்றும், குறுமுனிவர் என்றும் புலவர்கள் போற்றுவர். அகத்தியர் முத்தமிழுக்கும் சிறந்த இலக்கண நூலே இயற்றினர். அக்நூல் அகத்தியம் என்று கூறப்படும். அஃது இக்காலத்தில் முழு வடிவத்துடன் இடைக்கவில்லை. ஆயினும் சில குத்திரங்கள் நமக்குக் கிடைக்கினறன. அகத்தியம் என்ற இலக்கணமே தமிழில் தோன்றிய ஆதி இலக் இன நூலாகும். அது பன்னிரண்டாயிரம் சூத்திரங்களே உடையது என்பர்.

பொதிகைத் தமிழ்ச் சங்கம்

மேற்குத் தொடர்ச்சி மலேயின் ஒரு பகுதி பொதிகை மலே என்று கூறப்படும். அப் ஒபாதிகை மலே அடிவாரத்தில் பாவகாசம் என்ற தலம் ஒன்று உண்டு. அத் தலத்தில்