பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

பாடலைப் பாடினர். கருவிலேயே திருவுடைய பிள்ளையின் தெய்வப் புலமையைக் கண்டு அத் துறவிகள் வியந்தனர். அவர் திருமுகத்தில் விளங்கிய சிவஞானப் பொலிவைக் கண்டு போற்றினர். முக்களாலிங்கன் முத்தமிழ் வளர்க்கும் முனிவன் ஆவான் என்று மனம் க னி ங் து வாழ்த்தினர். அவ்வாழ்த்தைக் கேட்ட பெற்ருேர் அடைந்த மகிழ்ச்சிக்கோ அளவில்லை.

பிள்ளை, துறவிகளுடன் செல்லுதல்

முன்னே நல்வினைப் பயனல் முக்களாலிங்க ருக்கு அம் முனிவர்களுடன் செல்லவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அவர்களுடன் சென்று மெய்ஞ்ஞான நூல்களேக் கற்கவேண் டும் என்ற கருக்கு உகித்தது. முக்களாலிங்கர் தம் விருப்பத்தைப் பெற்ருேர்க்கு அறிவித் தார். சிறுபிள்ளேயாகிய அவரைப் பிரிவ தற்குப் பெற்ருேர் பெரிதும் வருந்தினர். பின்னர் ஒருவாறு துணிந்து பிள்ளேயை அத் துறவிகளுடன் அனுப்பினர்.

வேலப்ப தேசிகரைப் பணிதல்

ஆதீனத் தம்பிரான்கள் முக்களாலிங்

கரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சுசிங்

தரத்தை அடைந்தனர். அவ்வூரில் உள்ள