பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவஞானச் செல்வர் சிவஞான முனிவர் 69

ஆதீனத் திருமடத்தில் வேலப்ப தேசிகர் என் பார் சின்னப்பட்டமாக வீற்றிருந்தார். அவர் சிறந்த செந்தமிழ்ப் புலமை நிறைந் தவர். தம்பிரான்கள் முக்களாலிங்கருடன் சென்று அவரைக் கண்டு வணங்கினர். தேசிகர் அத் தம்பிரான்களிடம் உடன் வந்திருக்கும் சிறு பிள்ளே யார் ? என்று வினவினர். அவர்கள் நிகழ்ந்ததைத் தெரிவித் தனர். தேசிகர், முக்களாலிங்களின் பக்குவ நிலையைக் கண்டு பாராட்டினர். அவருக்குக் காவியுடை அளித்துக் கட்டுமாறு செய்தார். மெய்ஞ்ஞான நூல்களைக் கற்பித்தார். அன்று முதல் சிவஞானத் தம்பிரான்' என்ற திருப் பெயருடன் முககளாலிங்கர் திகழ்ந்தார். அப் பெயரே பிற்காலத்தில் 'சிவஞான முனிவர்' என்று வழங்கத் தொடங்கியது.

முனிவர் இருமொழி கற்றல்

சிவஞான முனிவர், வேலப்ப தேசிகரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தெளிவாகக் கற்றுத் தெரிந்தார். தமிழில் உள்ள சமய நூல்களையும் கற்றுத் தெளிந்தார். வடமொழி யையும் கற்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அம்மொழியில் உள்ள சிவாகம நால்களைக் கற்க விரும்பினர். தக்க வடமொழி வாணர்களிடம் பயின்று அம்