பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

மொழியிலும் வல்லவர் ஆர்ை. அதல்ை அவரை வடநாற் கடலும் தமிழ்நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்தவர்' என்று

போற்றினர்.

இராசவல்லிபுரத்தில் முனிவர்

வேலப்ப தேசிகர், ஆதினத் தலைவரைக் காண விரும்பினர். சிவஞான முனிவரையும் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். செல்லும் வழியில் உள்ள சிவத்தலங்களில் இறைவனே வழிபட்டார். தண்பொருநைக் கரையில் அமைந்த செப்பறைப் பதியை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள அழகிய கூத்தரையும் வழிபட்டார். பின்னர் அண்மை யில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரை அடைந்தனர். அத்தலத்தில் விளங்கும் அகிலாண்டநாயகி மீது, வேலப்ப தேசிகரின் விருப்பப்படி பதிகம் ஒன்று பாடினர். அதனைத் தேசிகர் முன்பு அரங்கேற்றினர். பின்பு இரு வரும் கொங்குநாட்டுப் பேரூரை அடைந்தனர். அங்கு இருககும்போது வேலப்ப தேசிகர் இறைவன் திருவடி அடைந்தார்.

தலங்கள் பல தரிசித்தல்

பின்பு, சிவஞான முனிவர் தம்முடன் வந்த துறவிகள் சிலருட ன் திருவாவடு