பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவஞானச் செல்வர் சிவஞான முனிவர் 71.

துறையை அடைந்தார். அங்குப் பட்டத்தில் இருந்த வேலப்ப தேசிகரைக் கண்டு வணங்கி னர். அவரிடம் சின்னப்பட்டம் வேலப்ப தேசிகர் மறைந்த செய்தியைத் தெரிவிததார். அங்கேயே தங்கியிருந்து பல நூல்களே இயற்றினர். சிவத் தலங்கள் பலவற்றிற்கும் சென்று இறைவனே வழிபட விரும்பி ஆதினத் தலைவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு தம் மாணவர் பலருடன் பல தலங் களுக்கும் சென்று தரிசித்தார்.

புலியூரில் புலவர் அவை

ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப் பாதிரிப்புலியூர் என்னும் தலத்தை அடைங் தார். அங்குள்ள திருக்கோயில் மண்டபத்தில் புலவர் பேரவை ஒன்று கூடியிருந்தது. அந்த அவையில் புகுந்த செல்வர் ஒருவர் நூறு பொன் கொண்ட முடிப்பு ஒன்றைப் புலவர்கள் முன்னே வைத்தார். கரையேற விட்ட முதல்வா உன்னே அன்றியுமோர் கதியுண்டாமோ? என்ற அடியைக் கடைசி அடியாகக்கொண்டு பாடல் ஒன்றைப் பாடு மாறு வேண்டினுள். அதனைப் பாடித் தரு வார்க்கு அப்பொன் முடிப்பு உரியதாகும் என்று அறிவித்தார்.