பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அந்தணன் பரிசுபெறுமாறு அருளுதல்

அவையில் இருந்த புலவர்கள் அன்று முழுவதும் முயன்றனர். எவரும் அச் செல்வர் உவக்குமாறு பாடலைப் பாடித் தரவில்லை. அவ்வூரில் ஒர் ஏழை அந்தணன் இருந்தான். அவன் சிவஞான முனிவரை அடைந்து பணிந்தான். அத்தகைய பாட்டைத் தனக்குப் பாடித் தருமாறு வேண்டின்ை. அந்தணன் வறுமையைக் கண்டு முனிவர் மனங் கசிந்தார். அழகிய பாட்டைப் பாடி அவன் கையில் கொடுத்தார். அந்தணனும் அந்தப் பாடலே அவையோரிடம் கொண்டு சென்று படித்துக் காட்டின்ை. செல்வரும் அப் பாட்டைக கேட்டு அகமகிழ்ந்தார். அந்தணன் பொன் முடிப்பைப் பெற்று வறுமை நீங்கப்பெற்ருன்.

மாயாடிய காலை ஆக்கி உதவல்

இச் செய்தியை அறிந்த சிவஞான முனிவர் மகிழ்ந்தார். திருப்பாதிரிப்புலியூரை விட்டுப் புறப்பட்டுக் காஞ்சிமாநகரை அடைந் தார். சைவ சமயத்தின் சிறந்த தத்துவ நூல் சிவஞானபோதம் எனப்படும். அது மெய் கண்டார் என்னும் அருளாசிரியரால் இயற்றப் பட்டது. அந்நூலுக்குச் சிறந்த உரை ஒன்று வரையவேண்டும் என்று நீண்டகாலமாக