பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவஞானச் செல்வர் சிவஞான முனிவர் 73

முனிவர் கினேத்திருந்தார். காஞ்சியில் இருக்கும் போது அவ்வெண்ணததை நிறைவேறறிக் கொண்டார். அதுவே 'சிவஞான போதமா பாடியம் என்று சைவர்கள் போற்றும் அரிய நூலாகும். இந்நூலே எழுதியதல்ை அவரை 'மாபாடிய கர்த்தா' என்று மககள் போறறத் தொடங்கினர்.

சோமேசர் முதுமொழி வெண்பா

சிவஞான முனிவம் தாம் சென்று வணங்கிய தலங்கள் பல. அவ்வத் தலங்களில் தங்கி இருக்கும்போது அங்கு எழுந்தருளியுளள இறைவன் மீது சிறுசிறு நூல்களைப் பாடுவர். அவ்வாறு அவர் பாடிய நூல்கள் பல ஆகும். அவர் குளத்துரில் தங்கியிருந்த பொழுது சோமேசர் முதுமொழி வெண்பா என்ற நூலேப் பாடினர். அந் நூல் திருக்குறள் ஆகிய முதுமொழியின் பொருளே வரலாற்ருல் விளக் கும் ஓர் - அரிய நூல் ஆகும். திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்திலிருந்தும் ஒவ்வொரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்தார். அங்ஙனம் தொகுத்த நாற்றுமுப்பத்துமூன்று திருக் குறளேயும் தனித் தனி வரலாற்றுடனமைத்து நூற்றுமுப்பத்துமூன்று வெண் பாக்களே இயற்றி விளக்கும் திறம் வியப்பைத் தரும்.