பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

காஞ்சிப் புராண அரங்கேற்றம்

சைவ சமய உண்மைகள் பலவற்றையும் தெளிவாக விளக்கும் சிறம் உடையது காஞ்சிப் புராணம். அஃது அரிய கற்பனை நயங்கள் நிறைந்தது. அப் புராணத்தின் மு. த ற் காண்டத்தை முனிவர் பாடி முடித்தார். அதனே அந்நகரில் கூடிய பேரவை ஒன்றில் அரங்கேற்றினர். காஞ்சிப் புராணத்தில் முதலில் கூத்தப் பெருமானுக்கே வணக்கம் கூறப்பெற்றுள்ளது. அதனேக் கேட்ட புலவர் சிலர் மறுத்தனர். முதலில் இத் தலத்திற்கு உரிய ஏகம்பகாதருக்கு வணக்கம் கூருமல் தில்லைப் பெருமானுக்கு வணக்கம் சொல்லி யமைக்குக் காரணம் என்ன ? என்று கேட்டனர்.

தடை கூறியவர்க்கு விடை

சிவஞான முனிவர் தடை கூறியவர் களுக்குத் தக்கவாறு விடைகூற விரும்பினர். காஞ்சியின் ஒதுவார் சிலரை அழைத்துவரச் செப்தார். அப் பதிக்கு உரிய தேவாரத்தை ஒதுமாறு வேண்டினர். அவர்களும் பாடத் தொடங்கினர். முதலில் திருச்சிற்றம்பலம் என்று சொல்லித் தேவாரத்தைப் பாடத் தொடங்கினர். சிவஞான முனிவரின் உள்ளக் குறிப்பை அங்கு இருந்த அவரது மாணவ.