பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவஞானச் செல்வர் சிவஞான முனிவர் 75.

ராகிய கச்சியப்பத் தம்பிரான் கண்டுகொண் டார். அன் வோதுவார்களே மேலே பாடாத வாறு நிறுத்தினர். இவர்கள் இத் தலத் திற்கு ஏற்றவாறு 'பிருதிவியம்பலம் என்று ஏன் கூறவில்லை? திருச்சிற்றம்பலம் என்று கூறுகிருர்களே. இவர்கள் செயல் உங்களுக்கு உடன்பாடுதான!" என்று தடை கூறியவர் களே நோக்கி வினவினுர். அவர்கள் விடை கூற வகையறியாது விழித்தனர். மெல்ல அந்த அவையினேவிட்டும் வெளியேறினர். புராண அரங்கேற்றமும் இனிது முடிந்தது. அப் புராணத்தின் பிற்பகுதியை முனிவரின் முதல் மாணவராகிய கச்சியப்பத் தம்பிரான் பாடி முடித்தார்.

சிவஞான முனிவரின் மறைவு

இவ்வாறு தமிழ் நாடெங்கும் சிவஞான முனிவர் தமிழ்மணமும் சிவமணமும் கமழச் செய்தார். இறுதியில் திருவாவடுதுறைக்கு, எழுந்தருளினர். அங்குத் தங்கித் துறவிக ளாகிய மாணவர் பலருக்குத் தமிழ் நூல்களே யும் சமய நூல்களையும் கற்பித்து வந்தார். கி. பி. 1785இல் சித்திரைத் திங்கள் ஆயில்ய

நாளில் சிவ ைடி அடைந்தார்.