பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தமிழ் மாணவர் போப்பையர்

சாயர்புரத்தில் கல்லூரி

திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர் புரம் என்னும் ஊர் ஒன்று உண்டு அது கிறிததவ நாடார்கள் நிறைந்த சிற்றுார் ஆகும். அவ்வூருக்குச் சென்ற நூற்ருண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து போப்பையர் கிறித்தவமத போதகராக வந்தார். அவ்வூரில் உள்ள சிறுவர்களின் அறிவைப் பெருக்கு வதற்குக் கல்லூரி ஒன்றை அமைக் கார். அங்குச் சிறந்த ஆசிரியர்களையே வேலையில் அமர்த்தினர்.

கல்லூரியில் கல்விநிலை

அக்கல்லூரியில் பல கலைகள் கற்பிக்கப் பட்டன. தமிழ், இலத்தின், கிரீக்கு, ஈபுரு போன்ற பல மொழிகளும் கற்பிக்கப் பெற்றன. கணிதம், தருக்கம், தத்துவம் போன்ற கலைகளும் கற்றுக் கொடுத்தனர். இவற்றைக் கற்றுக்கொடுப்பதற்குப் பகற் பொழுதும் காணவில்லை. ஆதலின் இரவிலும் கெடுநேரம் கல்லூரி நடைபெற்றது. சாயர் புரக் கல்லூரி ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டும் என்று போப்பையர் விரும்பினர்.