பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மாணவர் போப்பையர் 77.

சமயப்பணியும் தமிழ்ப்பணியும்

இளமையிலே துறவு பூண்ட போப்பையர் தமது பத்தொன்பதாம் வயதில் தமிழ் நாட்டிற்கு வந்தார். தக்க நல்லறிஞர்களிடம் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். கெல்லே நாட்டுச் சாயர் புரத்தில் தங்கிச் சமயப்பணி புரிந்து வந்தார். அறுபது ஆண்டுகள் வரை அவர் அங்கேயே தங்கிக் கிறித்தவப் பணியாற் றினர். பின்பு தம் தாய்நாட்டிற்குச் சென்ருர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரிய ராக அமர்ந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் ஆசிரியராக விளங்கினர். அப் பதவியில் இருந்து இருபது ஆண்டு களுக்கு மேலாகத் தமிழ்த்தொண்டு செய்தார். தமிழ்ப்பணியே தம் உயிர்ப்பணியாகக்

கொண்டார்.

தமிழில் நீதி நூல்கள்

தமிழ்மொழிக்குப் போப்பையர் செய்த தொண்டுகள் பலவாகும். தமிழில் அமைந்த சிறந்த நூல்களே அவர் ஆராய்ந்து கற்ருர். தமிழில் உள்ள நீதி நூல்களைக் கண்டு வியக் தார். ஐந்து வயதில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் என்று பாடம் ஒதுகின்ருர்கள். அறிவு