பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

வளர வளர மூதுரை, நல்வழி, நன்னெறி, நாலடியார் போன்ற நூல்களே ஒதுகின் றனர். இங்கனம் படிப்படியாக நீதிநூல்கள் தோன்றி இருப்பதைக் கண்டு மகிழ்க் தார். இந்நீதிநூல்களில் திருக்குறளும் காலடியாரும் சிறந்தன என்பதைத் தெரிங்தார். இவ்விரண்டு நீதிநூல்களையும் ஓதி உணர்ந்தார். அவற்றில் அடங்கிய அறிவுச் செல்வத்தை ஆராய்ந்து அறிந்தார். அவ்விரண்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆசைப்பட்டார். அவ்வாறே மொழி பெயர்த்து உலகிற்கு உதவினர்.

திருக்குறள் மொழிபெயர்ப்புக்கள்

இவர் காலத்திற்கு முன்பே திருக்குறள் சில மொ ழி க ளி ல் மொழிபெயர்க்கப்பட் டிருந்தது. வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப் பாலையும் பொருட் பாலேயும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்திருந் தார். செர்மானிய மொழியில் கிரால் என்பவர் நூல் முழுவதையும் மொழிபெயர்த்திருக்தார். ஏரியல் என்பார் பிரஞ்சு மொழியில் திருக் குறளின் ஒரு பாகத்தை மொழி பெயர்த்திருந் தார். ஆங்கிலத்தில் அதனே மொழிபெயர்க்க முயன்றவர்கள் அரைகுறையாகவே ஆக்கி யிருந்தனர். எல்லீசர் என்பார் பதின்மூன்று அதிகாரங்களின் சில பகுதிகளே மட்டும்