பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

என்று கவலையுடன் கூறினர். அதுகேட்ட நண்பர், " அறிஞரே! ஒரு சிறந்த வேலையைத் தொடங்கி கடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்கு உரிய வழி; அவ்வேலே முடியும் வரை உயிர் இருந்தே திரும்' என்று உறுதி யாக உரைத்தார்.

திருவாசக மொழிபெயர்ப்பும் அறிஞர் பாராட்டும்

நண்பரின் உறுதியான மொழியைப் போப்பையர் உயர்ந்த மந்திரமாகவே மதித் தார். அதனே கினேத்து ஊக்கமும் உறுதியும் கொண்டார். தமது எண்பதாவது பிறந்த நாள் அன்று திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை அச்சிட்டு வெளியிட்டார். அந்தப் பெரும்பணியைச் செய்து முடித்த பொழுது அவர் மனம் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தது. தோன்ருத் துணையாக கின்று உதவிய இறைவன் திருவருளே வாயார வாழ்த்தினர். தம்மை ஊக்கப்படுத்திய தம் நண்பரை நினைந்து மனம் கசிந்து உருகினர். போப் பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர். கள் ஏற்றுப் போற்றினர். அங்காளில் பாரிசு நகரத்தில் தேசீயக் கலாசாலையில் சூலியன் வின்சன் என்பவர் பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு தமிழ்ப் பாட்டால் ஐயரைப் பாராட்டினர்.