பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மாணவர் போப்பையர் 83

" இருவினே கடந்த செல்வன் இசைத்தவா

சகத்தை எல்லாம் வருவிளை யாட்டாற் போலும் மறுமொழி

யதனில் வைத்தீர்.”

என்பது வின்சன் தமிழ் வாக்கு. தமிழ் காட்டுப் புலவர்களும் ஐயர் திருவாசகத்தைப் டாட்டாலும் உரையாலும் புகழ்ந்தனர்.

பயன் கருதாப் பணி

இவ்வாறு போப்பையர் அரிய தமிழ் நூல்கள் மூன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவற்றைத் தம் ைக ப் பொருளேச் செலவுசெய்து சிறந்த முறையில் அச்சிட்டார். அவற்றை ஆங்கிலேயர் வாங்கி ஆதரிக்கமாட்டார் என்பதை அவர் அறிவார். எனினும் தமிழின்மீது கொண்ட தணியாத ஆர்வத்தால் இப்பணியில் பெரிதும் ஈடு பட்டார். பயன் கருதாது தமிழ்மொழிக்குப் பணிபுரிந்த பெரியார்களில் போப்பையரும் ஒருவர் ஆவார்.

தமிழ்ப்பணிக்குத் தங்கப்பதக்கம்

ஆங்கில நாட்டுக் கலைஞர் சங்கம் டோப் பையரைப் பெருமைப்படுத்த முன்வந்தது. விக்டோரியா மகாராணியாரின் வைரவிழா கினேவுக்குறியாக அங்காட்டில் தங்கப்பதக்கப்