பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

பரிசு ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த கலைவாணர் ஒருவருக்கு அப்பரிசினை வழங்குவர். 1906ஆம் ஆண்டில் அப்பரிசுக்கு உரியவராகப் போப்பையர் தேர்ந்தெடுக்கப்பெற்ருர். அப் பொழுது இந்திய காட்டு அமைச்சராக இருந்த சர். ஜான் மார்லி என்பவர் தலைமையில் பேரவை கூடியது. போப்பையர் தமிழ்ப் பணிகளைத் தலைவர் போற்றிப் பேசித் தங்கப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக அளித்தார்.

ஐயரின் தமிழ் ஆர்வம்

அடுத்த ஆண்டில் போப்பையர் இவ்வுலக வாழ்வை நீத்தார். தமது கல்லறையில் போப் பையர்-ஒரு தமிழ்மாணவர் என்ற வாசகம் எழுதப்பட வேண்டும் என்று அவர் விரும்பி ஞர். அவ்வாறே பொறிக்கப் பெற்ற கல் லொன்று அவர் கல்லறையைக் காட்டிக் கொண்டு நிற்கிறது. போப்பையரின் தமிழ்ப் பற்றுக்கு இதுவும் தக்க சான் ருகும் அன்ருே?