பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தெய்வத் தமிழ்வளர்த்த தாயுமானவர்

சோழ நாட்டின் பெருமை

சோழ வளநாடு சோறுடைத்து’ என்று புலவர் போற்றும் புகழ் வாய்ந்தது சோழ நாடு. வான் பொய்த்தாலும் தான் பொய்யாத காவிரியாறு பாயும் நீர்வளம் உடையது அங்காடு. அங்கேதான் தெய்வத் திருக் கோயில்கள் மிகுதியாக உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களும் அங் காட்டில் தான் மிகுதி. சைவத் திருமடங்களும் பல அங்காட்டில் இருக்கின்றன.

வேதாானியத்தில் கேடிலியப்பர்

இத்தகைய சோழ நாட்டில் திருமறைக் காடு என்னும் சிவத்தலம் ஒன்று உண்டு. அதனே இந்நாளில் வேதாரணியம் என்று கூறுவர். அத்தலத்தில் இறைவனே வேதங்கள் பூசித்து வழிபட்டமையால் அதற்கு வேதா ரணியம்' என்ற பெயர் ஏற்பட்டது. அவ்வூரில் கேடிலியப்பா என்னும் பெயருடையார் ஒருவர் வாழ்ந்தார். அவர் சைவவேளாளர் குலத்தில் உதித்த உத்தமம். கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினர். செயவன திருந்தச் செய்யும் செயல்திறம் படைத்தவர்.