பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8f; முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

இத்தகைய கேடிலியப்பர் திருமறைக்காட்டில் உள் ள திருக்கோயிலின் அறத்தலைவராக விளங்கினர்.

மறைக்காட்டில் காயக்க மன்னர்

அங்காளில் திருச்சிராப்பள்ளியில் நாயக்க மன்னர் ஆட்சிபுரிந்து வந்தனர். விசய ரகுநாத சொக்கலிங்க நாயக்கர் என்பவர் அப்போது அரசராக விளங்கினர். அவர் இன்னுள் ஒன்றில் கடல் ரோடுவதற்காகத் திருமறைக்காட்டிற்கு வங் த ர். அவர் கடலாடிவிட்டுத் திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்தார். அம்மன்னரைக் கேடிலியப்பர் எதிர்கொண்டு சிறப்பாக வரவேற்ருர். மறைக்காட்டு இறைவனே இனிய முறையில் வழிபட்டு மகிழுமாறும் செய்தார்.

சம்பிரதி கேடிலியப்பர்

திருக்கோயில் வழிபாட்டிற்கு வந்த மன்னர், கேடிலியப்பரின் திறமையைக் கண்டு மகிழ்ந்தார். அவரைத் தம்முடன் அழைத்துச் சென்ருர், அரசாங்கத்தில் தலைமைக்கணக்கர் என்னும் உயர்ந்த பதவியில் அவரை அமர்த் திச் சம்பிரதி என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கிப் பாராட்டி னர். சம்பிரதி யாகிய கேடிலியப்பர் அரசாங்கச் சிறப்புக்