பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

செட்டிப் பெண்ணின் தாய்

காவிரிப்பூம் பட்டினத்தில் பி ற ங் த செட்டிப் பெண் ஒருத்தி திருச்சிராப்பள்ளியில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். அப் பெண் தலைப் பிள்ளையைப் பெறும் காலம் நெருங்கியது. பிள்ளைப் பேறு பார்ப்பதற்குப் பக்கத்தில் அவளுக்கு உற்ருர் உறவினர் எவரும் இல்லை. ஆதலின் உதவி செய்ய வருமாறு காவிரிப்பூம் பட்டினத்தில் இருக்கும் தன் தாய்க்குச் செய்தி யனுப்பியிருந்தாள். அச்செய்தி கேட்ட தாய் திருச்சிராப்பள்ளியை நோக்கி வந்தாள்.

தாய், இறைவனை வேண்டுதல்

திருச்சிராப்பள்ளியின் வடபால் காவிரி யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லு கின்றது. அ வ் வா ற் றி ன் வடகரையை அடைந்த அத்தாய் தென்கரையில் உள்ள திருச்சிராப்பள்ளிக்கு வர முடியாது வருங் திள்ை. வெள்ளத்தைக் கடப்பதற்கு வகை தெரியாது உள்ளம் வெதும்பினள். பெற்ற மகளுக்கு உற்ற சமயத்தில் உதவ முடியாது போயிற்றே என்று ஏங்கிள்ை. எதிர்க் கரை யில் நின்ற வண்ணம் குன்றமர்ந்த ஈசனைக் குறையிரங்து வேண்டினள். 'என் மகளே நீரே காத்தருள வேண்டும்' என்று மனம் கசிந்து வேண்டினள்.