பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதயவத தமிழ வளாதத தாயுமானவா 恐*

இறைவனகிய தாயும் உண்மைத் தாயும்

அன்புடன் வேண்டுவார்க்கு அருள் புரியும் ஆண்டவன் அத்தாயின் வடிவை மேற் கொண்டு சென்று பிரசவ வேதனை யால் வருந்தும் செட்டி மகளுக்கு உதவின்ை. அப்பெண் ஆண் மகவைப் பெற்று மகிழ்ந் தாள். தக்க சமயத்தில் வந்து உதவிய தாயின் பேரன்பைப் பாராட்டிள்ை. மறுநாள் காவிரியில் வெள்ளம் சிறிது வற்றியது. அதன் பின்னர் வெள்ளத்தைக் கடக்கப் படகு விடத் தொடங்கினர். எதிர்க் கரையில் நின்ற தாய் படகில் ஏறித் திருச்சிராப்பள்ளியி லுள்ள தன் மகள் வீட்டை அடைந்தாள். அடைந்ததும் அவள் முந்திய நாளே குழந்தை பிறந்த செய்தியைத் தெரிந்தாள். ஊரிலிருந்து ஒடோடி வங்தும் மகளுக்கு உதவமுடியாது போயிற்றே என்று உள்ளம் உலேங்தாள்.

இறைவன் தாயுமானவனுதல்

வருத்தத்தோடு உண்மைத்தாய் வீட்டி னுள் வருதலும் முன்னே தாயாக வங்து உதவிய இறைவன் மறைந்தான். அத்தாயின் வருத்தத்தைக் கண்ட மகள் மிகவும் திகைத் தாள். இதுவரை தாயின் வடிவோடு இருங் தவர் இறைவனே என்று எண்ணி மனம் பூரித்தாள். திருச்சிராப்பள்ளிக் குன்றில்