பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் வளர்த்த தாயுமானவர் 91.

இறங்தார். தலைமைக் கணக்கரை இழந்த நாயக்க மன்னர், தாயுமானவரை வரவழைத் தார். அவருடைய அரிய திறமையை ஆராய்ந்து அறிந்தார். தங்தையார் பதவியில் மைந்தரை இருக்கச் செய்தார். தாயுமானவர் தாம் ஏற்ற அரசாங்கப் பதவியைத் திறமை யுடன் நடத்தினர். எனினும் தாமரை இலையில் தண்ணிர் போலப் பதவியில் பற். றில்லாது இருந்தார். உயிருக்கு உறுதியைத் தரும் உயர் வழியில் செல்லும் நாளையே எதிர்நோக்கி இருந்தார். -

மன்னர் மறைவு

அக்காலத்தில் மெளனகுரு சுவாமிகள் என்னும் பெரியவர் திருச்சிராப்பள்ளிக்கு வங்தார். அவர் தாயுமானவர் தி ரு க் கோயிலில் சில நாள் தங்கியிருந்தார். அவ. ருடைய திருவருள் ஒருநாள் தாயுமான வர்க்குக் கிடைத்தது. இந்நாளில் நாயக்க மன்னர் உயிர்நீத்தார். அவருக்கு மக்கட் பேறு இல்லை. ஆதலின் அவருக்குச் செய்ய வேண்டிய கடன்களை எல்லாம் அரசியே செய்து முடித் தாள். அதன் பின்னர் அரசாங்கக் காரியங்களையும் அவளே கவனித்து வங்தாள்.