பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

தாயுமானவர் பதவியை வெறுத்தல்

அரசிக்கும் அரசியற் பணியை நன்கு திறம்பட ஆற்றிவங்த தாயுமானவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. கருத்து வேறுபட்ட நிலைமையில் பணிபுரிந்து வருவது தக்கது அன்று என எண்ணித் தாயுமானவர் உடனே புறப்பட்டுச் சென்று இராமநாத புரத்தை அடைந்தார்.

தமையனர் வேண்டுகோள்

தமையனர் ஆகிய சிவசிதம்பரம் பிள்ளை திருச்சிராப்பள்ளியில் நடந்த செய்திகளை அறிந்தார். அவர் உடனே புறப்பட்டு இராமநாதபுரத்தை அடைந்தார். தம் தம்பியா ராகிய தாயுமானவரைக் கண்டார். "நம் குலம் தழைக்கத் திருமணம் புரிக 1 இல்லறத்தில் இனிது வாழ்க! என்று தம்பியாரை அன் புடன் வேண்டினர். அவரைத் திருமறைக் காட்டிற்கு அழைத்துச்சென்ருர். தாயுமானவர் இயற்கையிலேயே துறவுள்ளம் பூண்டவர். திருமணம் செய்து கொள்வதைப் பெரிதும் வெறுத்தார். ஆயினும் தமையனரின் வற் புறுத்தலுக்கு இணங்கினர். அவர் ஞானசிரிய ராகிய மெளனகுருவும் அவ்வாறே ஆணையிட் -L-fFÍT.