பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் வளர்த்த தாயுமானவர் 93.

தாயுமானவர் இல்லறம்

உறவினர் விருப்பத்திற்கு இசைங்த தாயுமானவர், மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணம் செய்து கொண்டார். சில காலம் அவ்வம்மையாருடன் இல்லறத்தை இனிது நடத்தினர். அங்காளில் தாயுமான வருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குக் கனகசபாபதி என்று டெய ரிட்டனர். ஒருங்ாள் தம் ஞானசிரியராகிய மெளனகுருவைத் தரிசித்தார். அவர் தாயு மானவரைத் துறவறத்தை மேற்கொள்ளு மாறு தூண்டிச் சென்ருர், பாமாலை புனைதல்

சில நாட்கள் கழித்துத் தாயுமானவர் துறவறம் பூண்டார். தம் வீட்டை விட்டுப் புறப்பட்டார். திருவாரூர், தில்லை, திருவண்ணு மலே, மதுரை முதலிய சிவத்தலங்களைத் தரிசித் தார். இறைவன்மீது பல வகையான தோத் திரப் பாடல்களைப் பாடியருளினர். தெய்வத் தமிழ்ப் பாமாலைகளைப் புனேங்தார். சிவபெரு மானுக்கு அணிந்து சித்தம் மகிழ்ந்தார். கடைசியில் இராமேச்சுரத்தை அடைந்தார்.

மழை பெய்யுமாறு பாடுதல் -

தாயுமானவர் அத்தலத்தை அடைந்த போது மழையின்றி மக்கள் வாடி நிற்பதைக்