பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘94 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

கண்டார். அவர்களின் துயரத்தைக் கண்ட தாயுமானவர் மனம் இரங்கினர். அப்போது,

'சைவ சமயம் சமயமெனில் அச்சமயத்

தெய்வம் பிறைகுடும் தெய்வமெனில்-ஐவரைவென் ருனந்த இன்பத் தழுந்துவதே முத்தியெனில் வானங்காள்! பெய்க மழை !” என்ற திருப்பாட்டைப் பாடியருளினர். உடனே பெருமழை பொழியத் தொடங்கியது. அங்குள்ள மக்கள் தாயுமானவரின் பெருமை யைத் தெரிந்து போற்றினர்.

மாணவர்க்கு மெய்யறிவு

பின்பு தாயுமானவர் அங்கிருந்து புறப் பட்டு இராமநாதபுரத்தை அடைந்தார். அவரைப் பிரியாது அருளேயர், கோடிக்கரை ஞானியார் முதலிய நன்மாணவர் சிலர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கட்குத் தாயு மானவர் மெய்யறிவை ஊட்டினர். பின்னர் கி. பி. 1662 ஆம் ஆண்டில் தைத்திங்கள் விசாக நாளில் இறைவன் திருவடி அடைக் தார்.

தாயுமானவர் திருப்பாடல்

தாயுமானவர் பல சமயங்களில் பல தலங் களில் பாடியருளிய தெய்வத்தமிழ்ப் பாடல் கள், அவருடைய மாணவர் அருளேயர் என்பவ.