பக்கம்:முத்தம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

களையெல்லாம் கவனிக்கும் பணிப்பெண்ணாக மாறுவதும், கணவன் இஷ்டம் போலெல்லாம் இயங்கி வாழ்வதும்-அது ஒரு வாழ்வா! அர்த்தமற்ற பொம்மலாட்டம், 'வாழையடி வாழையாக' அப்படித் தான் வாழ்ந்து வருகிறார்கள்; அது தான் தர்மம் என்று சொன்னால், அவர்களுக்கு வாழத் தெரியவில்லை என்று தான் அர்த்தம், அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பெண்கள் இப்படியா வாழ்கிறார்கள்? இங்கு தான் தங்கள் வாழ்வையும், சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு.....

அது மாதிரி வாழ நான் தயாராக யில்லை. கல்யாணமும் வேண்டாம்; காடாத்தும் வேண்டாம். ஒரு கருமாதியும் வேண்டாம் போ! வாழ்விலே புதுமை இருக்கணும், செக்கு மாடு மாதிரி தடம் விழுந்த பாதையிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு....... ஹூம்!'

இவ்விதம் அடிக்கடி எண்ணிக்கொண்டாள் பத்மா. அவள் கலாசாலையில் படிப்பவள். 'ஒரு மாதிரி' என்பது அவளைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் குண எடை. அதாவது ஸ்குரூ கொஞ்சம் லூஸ்! என்ன புஸ்தகம் கிடைச்சாலும் உயிரைக் கொடுத்துப் படிக்கத் தொடங்கி விடுவாள். சதா கற்பனையும் கனவும் தான். தெருவிலும் கல்லூரியிலும் நம் நடுவிலும் அவள் நடமாடினாலும், அவள் உள்ளம் சதா வேறு எங்கோ தான் பறந்து கொண்டிருக்கும். கவைக் குதவாத கனவும், வாழ்வுக்கு ஒத்துவராத கற்பனையும் அவளுக்கு நிலாச்சோறு மாதிரி. அத்தகைய விஷயங்களை வைத்துக்கொண்டு. பேச ஆரம்பித்தாளோ-அவ்வளவுதான். பன்னாப் பன்னாயென்று பஞ்சு வெட்டுறது, கொட்டை நூற்கிறது என்று சொல்வார்களே சிலர் பேச்சைப் பற்றி அந்த ரகம்தான். விரிவாக ஆராயப்போனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/10&oldid=1496253" இலிருந்து மீள்விக்கப்பட்டது