பக்கம்:முத்தம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

 தன் வழி ஏகிய பத்மா நினைத்தாள்: 'இவர் ரொம்ப நல்லவர். மற்றவங்களும் இருக்கிறாங்களே வெறிச்சுவெறிச்சு முழிச்சுப் பார்க்கிறது ம், பல்லை இளிக்கிறதுமாக, இவர் அன்றைக்குப் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'

ரகுராமனை அவள் முதன் முதலில் உணர்ந்து கொண்டதே 'விவாதக் குழு'வின் ஒரு கூட்டத்தில் தான். சாதாரணமாக அவள் பிறரை மதிப்பதில்லை, கவனிப்பதில்லை. அவர்கள் தன்னை கெளரவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுமில்லை. அவன் சகஜ மாகப் பேசிச் சிரித்துப் பழகுவதெல்லாம் புஷ்பா, தேவகி, காந்திமதி முதலிய தோழிகளுடன் தான். மாணவர்களிடையே பலரகமானவர்களும் உண்டு, உலகம் பலவிதம் தானே!' என்று அறிந்து அவர்களை ஒதுக்கி விட்டாள். ஆனால் அந்த விவாத நாளில் ரகுராமன் ஒற்றைத்தனியன் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்து விட்டது;

அந்த விவாதமே அவளது தோழிகள் விளையாட்டாக இழுத்துவிட்ட வினைதான். அவர்களுக்கு பத்மாவையும் அவள்போக்கையும் பற்றிப் பேசிச் சிரித்து ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் என்று ஆசை. தினம் தங்களுக்குள் பேசிலூட்டியடிப்பது போதாது எனக்கருதி பெரிய ரகளைக்கு வித்து ஊன்றி விட் டார்கள் 'விவாதக்குழு'வில் 'இப்படியும் வாழலாம் 'என்கிற தொடரில் 'பிளட்டானிக் லவ்' பற்றி விவாதத்துக்கு ஏற்பாடுசெய்து விட்டார்கள். இதுமாதிரி விஷயங்களில் யாருக்குத் தான் உற்சாகம் குறையும் ?

ஆனால் பத்மா தயங்கினாள். சினுங்கினாள். சீறினாள்முடியாது, பேசமுடியாது. என மறுத்தாள்.

'அப்போ உன் கொள்கையில் உனக்கே நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம், இப்பேவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/25&oldid=1496520" இலிருந்து மீள்விக்கப்பட்டது