பக்கம்:முத்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


இப்படீன்னா, இந்த லெட்சணத்திலே இவவாழ்க்கை பூராவும் தெய்வீகக் காதலை அனுஷ்டிக்கப் போறாளாம்! வழிகாட்ட வேறே போகிறளாமேடி ! ஐயோடீயேன்னளாம்!' - புஷ்பாவும் பிறரும் இவ் விதம் கேலிசெய்யவே பத்மாவுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. பேசியே தீர்ப்பது என்று துணிந்து விட்டாள். விவாதம் கனகுஷியாகத் தான் நடந்தது. எல்லாரும் உற்சாகமாகப் பேசித் தள்ளினார்கள். கவிதைகளும் இலக்கிய மொழிகளும் தண்ணீர் படுகிற பாடுபட்டன. எதிர்த்துப் பலர்பிரசங்க மாரி பொழிந்தார்கள். சிலர் ஆதரித்தார்கள். பத்மாவின் கொள்கையை ஆதரித்தவர்களில் ரகுரா மனும் ஒருவன்.

அந்தக் காரணத்தினால் மட்டுமே அவனிடம் கருணைபிறந்து விடவில்லை அவளுக்கு. மற்றவர்கள் விவாதத்துக்காகக் கூப்பாடு போட்டார்கள். அழகி பத்மாவை எதிர்த்து மட்டம் தட்டவேண்டும் என்பதற்காகவோ, பத்மாவின் புன்னகையைப் பெற வேண்டும் என்றகாரணமாகவோ பலர் உற்சாகமாக விவாதித்தார்கள். ஆனால் ரகுராமனோ கொள்கைக்காகப் போராடினான். அதில் அவனுக்கு அழுத்தமான பற்றுதலும், ஆழ்ந்த ஈடுபாடும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தன என்பது அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் ஒலித்தது. பத்மாவுக்காக அவன் பரிந்து பேச வில்லை. பத்மாவையே அவன் கவனிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். த ன க் கா க, தனது கொள்கைக்காக அவன் பேசினான்.

'ஒரு ஊரிலே இரண்டு பைத்தியக்காரர்களா' என்றொரு வசனம் உண்டு. அதன் சரியானபொருள் என்னவோ எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஒரே ஊரில் ஒன்பது பத்து பைத்தியங்கள் அலைவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/26&oldid=1496604" இலிருந்து மீள்விக்கப்பட்டது