பக்கம்:முத்தம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


தொட்டாள். கன்னங்களைத் தொட்டாள். அவன் மேனியைத் தொட்டாள். கூந்தலில் விரல்களை ஓட விட்டாள். கண்டிரா இன்ப உணர்ச்சி-உணர்வின் பெருக்கு-அவள் உள்ளத்தில் ; உடலில்.

அந்த ஸ்பரிசம் அதை உறுதி செய்தது. அவன் உணர்வுத் தீயை மீண்டும் கிளறிவிட்டது. அதிகம் எவ்விடச் செய்தது. அவன் கண்விழித்து அவளையே பார்த்தான். பார்வையால் விழுங்கினான்.

‘பத்மா' என்றான் உணர்ச்சியோடு. அவள் அவனருகில் அமர்ந்தாள். 'ரகு....ரகுராமா!' அவள் முகம் தாழ்ந்தது. தாழ்ந்து..... தாழ்ந்து.... அனல் துண்டங்கள் போன்ற உதடுகள் இலேசாகப் பிரிந்து துடித்து நிற்கத் தாழ்ந்து....

'பத்மு!' என்று ஆவலோடு கரங்களை வளைத்து அவள் கழுத்தில் சேர்த்தான் அவன்.

அவள் முகம் அவன் முகம் சேர்ந்தது. உதடுகள் உதடுகளைக் கூடின. முத்தம்.

முதல் முத்தம் 'இச்' என்று ஒலித்தது. அது உணர்ச்சியின் வெற்றிக்குரல். அறிவு வகுத்த அதீதமான ஆத்மக் காதல்-லட்சியக் கனவுகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியின் மெல்லிய ஓசை.

அவள் சிறிது விலகினாள். அவன் உணர்வுடன் அவளைப் புல்லி, கன்னத்தில், கண்களில், மூக்கில், உதடுகளில், நெற்றியில் எங்கும் முத்தமிட்டான். முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தங்களிட்டு.........

இன்ப ஒலிப்பு. வாழ்க்கை மறுமலர்ச்சிக்கு வரவேற்பு கூறும் இனிய மணியோசைபோல ஒலித்தது. 'இச்' 'இச்' எனும் முத்த நாதம் !


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/42&oldid=1496649" இலிருந்து மீள்விக்கப்பட்டது