பக்கம்:முத்தாரம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[35] பாசி இல்லை பயமுமில்லை. அதோடு ஒன்று குழந்தாய்! உனக்குக் கடவுள் என்ற எண்ணமு மில்லை. நீயும் நாத்தீக வாதி. நல்ல மனத்திற்கு குழந்தை மனம் என்று பெயர். ஆகையால் நாத்தீகர் நல்ல மனம் படைத் தவர். நல்ல மனம் படைத்தவர் நாத்தீகர். 委任 SEA 'அல்ல, அல்ல! நல்லது கெட்டது தெரியாக் குழந்தை - அறிவு தெளியாப் பருவம் அரவத்தோடு விளையாடும் காலம் - ஆகையால் ஆண்டவன் சிந்தனை கிடையாது. வளர்ந்த மனிதன், நல்லது கெட்டது புரிந்தவன். பாம்பை நஞ்சென அறிந்தவன். அவன் சிந்தனைக்குக் கடவுள் தெரிகிறார்" என்று வாதிடுவோரை நான்றிவேன் கண்ணே! நீ நாகத்தோடு விளையாடுவது போலத் தான் பெரியவர்கள் நாசத்தோடு விளையாடு கிறார்கள் - அவர்கள் ஆண்டவனை வணங்கு கிறார்கள். வாழ்த்துகிறார்கள். ஏத்திப் பாடுகிறார்கள்! அவர்கள் அறிவு தெளிந்த வர்கள் என்றா அர்த்தம் ! பாம்பொடு விளை யாடும் பண்பில் நீயும் அவர்களும் ஒன்று தானே குழந்தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/36&oldid=1706712" இலிருந்து மீள்விக்கப்பட்டது