பக்கம்:முத்தாரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[45] கடமை புரிந்தபடி கடல் நோக்கிச் செல் லும் நதியரசே! கடலை, நீ தான் சென்று நிரப்புகிறாய் என்று மட்டும் நினைத்து விடாதே! அப்படித்தான் இந்த வையகத் தில் அரசுபுரிவோர் நினைத்து விடுகிறார்கள். சமுத்திரத்து நீர் முகிலாக மாறியதால் நீ சந்தன வண்ண ஆறாக ஓடுகிறாய்! ஆறு போல்தான் அரசு! ஜன சமுத்திரத்தின் படைப்பு ! நிலைகெட்டு ஓடினால் அணை போட்டுத்தடுப்பர், நதியே உன்னை! நாடாளும் அரசுக்கும் அக்கதிதான்! ஓடும்போதே, இந்தப் பாடம் சொல்லி, வாழ்ந்திடு நதியே! வாழ்ந்திடு ! நதியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/46&oldid=1706722" இலிருந்து மீள்விக்கப்பட்டது