பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஆகவேதான் அவன் வேலையை, காதல்பெண்ணை, ஒளிமயமான எதிர்காலத்தை, சமூக அந்தஸ்தை, சொத்து சுகத்தை எல்லாம் உதறி விட்டு சாமியார் மடத் துக்கு ஓடிப்போன்ை.

} දෑ 3 ఫః బ్బీ { ఝ గ్స్ల

ச மிய ர் வாழ்க்கையிலும் பரிபூரணத்துவம் எய்தவே பாடுபட்டான் அவன். அது அவனது பிறவிக் குணம். வெற்றியும் பெற்ருன். எல்லோரும் வரக்கூடிய பொது விடத்தில் தங்கி யிருப்பதால் உள்ளம் சஞ்சலம் அடையும், ஆசைகள் வளரும் என்று கருதி, முற்றிலும் தனியான இடம் ஒன்றை வேண்டின்ை அவன். அத்த கைய ஒதுக்கிடம் அவனுக்கு அளிக்கப்பட்டது.

தானுகவே துறவை மேற்கொண்ட புகழ்ப்பசிய னின் தற்சிறப்பு மோகியின் - மனநிலையை, எண். னங்களை, செயல்களை உள்ளக் களிப்பை அருமையாகச் சித்திரித்துள்ளார் டால்ஸ்டாய் அருள்தந்தை ஸெர்ஜி யஸ்’ எனும் நெடுங்கதையிலே. மன்னர் மன்னனின் காமினியாக விளங்கிய இளம் பெண்ணை மணந்து, மதிப் பும் பதவி உயர்வும் நல்வாழ்வும் பெற்ற ஒன்றிருவர் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களேப் போல அவ னும் உயர்வடைந்திருக்க முடியும், அந்தப் பெண்ணே மனைவியாக ஏற்றுக் கொண்டிருந்தால். அந்த அவல ஆசையிலிருந்து தப்பி ஒடிவந்துவிட்டதற்காக அவன் மகிழ்வுற்றதும் உண்டு. சில சமயங்களில் மனம் வருந் தியதும் உண்டு. இந்நிலையில் தொடங்கி அவனது மனே வளர்ச்சியையும், பண்பு மாற்றத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிருர் ஆசிரியர்.

உரிய காலத்தில், பல தேர்ச்சிகள் பெற்ற பின்னர், *அருள் தந்தை ஸெர்ஜியஸ் என்ற பெயர் அவனுக்குக்