பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

கிடைத்தது. முற்றும் துறந்த ஏகாங்கியாக வாழ ஆசைப்பட்ட ஸெர்ஜியஸ், முன்பு ஒரு புனிதர் தங்கியீ ருந்து, தனித்தவம் புரிந்து, உயிர்விட்ட ஒரு குகைக் குடிலே அடைந்தான். கடும் தவவாழ்வை மேற்கொண் 漫、鄧°校汀。

அப்படி ஆறு வருஷங்கள் கழித்துவிட்டான் அவன். ஸெர்ஜியஸ் பெயர் நெடுகிலும் பரவி யிருந்தது. அந்தச் சமயத்தில் கொடிய சோதனை ஒன்று அவனை

எதிர்நோக்கி வந்தது.

உல்லாச் மாலே நேரம். ஒய்யாரி மகோவ்கிளுேவும் அவள் நண்பர்களும் ஆனந்தமாகப் பிரயாணம் செய்து ஸெர்ஜியஸின் குகை இருந்த தனிமடத்தின் அருகே வந்து சேர்ந்தார்கள். அருள் தந்தை ஸெர்ஜியஸ் தான் முன்னுள் ஆணழகன் காஸ்ட்ஸ்கி என அறிந்த ஒய்யாரி கிளர்ச்சி யுற்ருள். அந்தச் சாமியாரோடு இன்று இர வைக் கழிப்பேன் என்று சூளுரைத்தாள். நடக்க இய லாத காரியம் என நண்பர்கள் கூறியும், அவள் அடம் பிடித்தாள். இதர பெண்களும் நண்பர்களும் அவளே குகைக்குடில் அருகே இறக்கிவிட்டு, பின்னர் வருவதா கச் சொல்லிப் பிரிந்தார்கள். அவள் தயவைப்பெற ஆசைப்பட்டு அவளுக்கு உபசரனேகள் செய்துவந்து ஒரு வக்கீல் மாத்திரம் அவளேக் கவனித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அங்கே இறங்கினன்.

"எப்போ பாரு, ஒரே தினுசுதான்! எல்லாம் ஒரே மாதிரி, ஒரு மாறுதல் கிடையாது. புதுமைகிடையாது. அருவருப்பு தரும்படியான வாழ்வு : குடிநாற்றமும் புகையிலே வீச்சமும் மண்டிய செம்மூஞ்சிகள். எப்பவும் ஒரேமாதிரிப் பேச்சு. அதேமாதிரி எண்ணம். சாக்கடை உள்ளம். அழுகல் வாழ்வு. அதிலேயே திருப்தி. எனக்கு இது பிடிக்க வில்லை. எனக்கு அதிர்ச்சி