பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 00

வைத்தியம் தேவை. நான் பார்க்க அழகாகத்தான் இருக்கிறேன். அந்தச் சாமியார் எப்படி இருப்பாரோ, தெரியலியே. அந்த ஆசையை அவர் உண்மையாகவே இழந்திருப்பாரா என்ன ? நாற்பது வயசுக்குமேல் ஆகி விட்டால்தான் என்ன ? பெண் ஆசையை வென்றிருப் பாரோ ? அதைத்தான் நான் அறிந்தாக வேண்டும்...?

இவ்வாறு எண்ணிக்காண்டே குகை அறையின் கதவை நோக்கிச் சென்ருள் அந்தச் சிங்காரி.

அருள் தந்தை செர்ஜியசுக்கு அப்போது நாற்பத் தொன்பது வயசு, அவர் தனியராய் குகைக் குடிலுள் ஒடுங்கிக்கிடந்து ஆறு வருஷங்கள் ஓடிவிட்டன. அவர் அனுபவித்த மன உளைச்சலுக்கும் உணர்ச்சிப் போராட் டத்துக்கும் ஒரு அளவு கிடையாது. முக்கியமாக, சந்தேகம், காமம் ஆகிய இரண்டும் அவரைப் படாத பாடு படுத்தின. அப்படி அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமயத்தில்தான் அலங்காரி வந்து கதவை இடித்தாள். -

முதலில் அது வெறும் பிரமை என்று எண்ணினர் அவர். பேயோ, பிசாசோ எனக் கருதினர். வெளியே கொட்டும் பனி மழையில் நின்று விறைத்துப் போவதாக அவள் அழுது புலம்பினுள். சாமியார் ஒருவாறு மன மிரங்கிக் கதவைத் திறந்தார்.

இனிய மணம் பரப்பியவாறே உள்ளே புகுந்தாள் சிங்காரி. அப்படி வந்து அவருக்குத் தொல்லை கொடுக்க நேர்ந்தது பற்றி ஒரு கதை கட்டினுள். மன்னிப்பு கோரி ளுள். அவர் முன் னிலையில் பொய் சொல்ல முடியாமல் திணறினுள். அவள் என்னவோ எதிர்பார்த்து வந்தாள். அவள் கற்பனை செய்தபடி இல்லையே இந்த சாமியார். இருந்தாலும், அவளுக்கு அவர் அழகுடையவராகத் தான் தோன் றிஞர்.