பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தனியாக இருக்கையில் தன் மகளைப்பற்றிச் சொன்னன், -அந்தப் பெண்ணுக்கு தீராத வியாதி. யாராலும் குணப்படுத்த முடியவில்லை. சாமிதான் அருள் புரிய வேண்டும். அப்போதான் அவளுக்குக் கல்யாணம் நடைபெறும், பெற்ருேர் மனம் மகிழும். இப்படிப் புலம்பின்ை. அன்று மாலை அவளை அழைத்து வரும்படி சொன்னர் தந்தையார்’,

வழக்கமான முறையில் நாள் ஊர்ந்தது. Drಔು வந்தது. மே மாதத்து அழகிய மாலை நேரம். இயற்கை யும் சுற்றுப்புறமும் புத்தெழிலுடன், புது இளமையோடு மோகனமாக விளங்கிக் கொண்டிருந்தன.

ஸ்டீபன் காஸ்ட்ஸ்கியாக இருந்த ஒருவன் அற்புதங் கள் செய்யும் ஞானியாய், புனிதராய் வளர்ந்துவிட்டான்; அவன் புகழ் நாட்டின் மூலைக்கு மூலே பரவியிருக்கிறது. மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் கூட அவனது அருள் திறம்பற்றி அறிவார். பத்திரிகைகள் துதி பாடுகின்றன. நாத்திகம் பரவிய நாகரிக ஐரோப்பா கூட தந்தை ஸெர் ஜியஸின் பெருமையை அறிந்துள்ளது-இவ்வாறு தற் பெருமையோடு அவர் எண்ணி மகிழ்வடைந்தார். இப்போது நெடுந் தொலைவிலிருந்து வியாபாரி வந்திருக் கிருன். அவன் மகளும் வந்திருக்கிருள். என்ன நம்பிக்கை தன்னுடைய சக்தி பேரில்! அந்தப் பெண் எப்படி இருப்பாளோ? இருபத்திரண்டு வயசுப் பெண்ணும். சதைப் பிடிப்பு உள்ளவள்; ஆளுல் ஏதோ நரம்பு வியாதி! அவளிடம் பெண்மைக் கவர்ச்சி இருக்குமா இராதா என்று பார்க்க வேண்டும்...

சாமியார் திடுக்கிட்டார், தமது மனசின் போக்கை உணர்ந்து. பிறகு பிரார்த்தனையில் மூழ்கினர்.

வியாபாரி மகளுடன் வந்து சேர்ந்தான். அந்த இளம்பெண் கவர்ச்சியுடையவள்தான். பயந்த சுபாவம்